© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் மத்திய பொருளாதார பணிக் கூட்டம் டிசம்பர் 11, 12ஆம் நாட்களில் நடைபெற்றது. அடுத்தாண்டின் பொருளாதார வளர்ச்சிக்கான 9 முக்கிய கடமைகள் இக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நிலையான சூழலில் வளர்ச்சியடைய பின்தொடர்வது இதில் முன்வைக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மீட்சி மந்தமாக இருக்கும் பின்னணியில், ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கை மற்றும் நிலையான நாணயக் கொள்கையைச் சீனா தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. உலகில் இழந்து வரும் தொடர்ச்சி மற்றும் நிலைப்புத் தன்மைகளே, சீனாவின் அடுத்தாண்டு பொருளாதார கொள்கைகளில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்தைச் சார்ந்திருந்து வளர்ச்சியை நனவாக்குவதன் மூலம், நிலையான வளர்ச்சியை முன்னேற்றச் சீனா பாடுபடும்.
அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்தின் மூலம் நவீனமயமாக்கப்பட்ட தொழில் அமைப்பு முறையின் கட்டுமானத்தை முன்னெடுப்பது என அடுத்தாண்டு சீனப் பொருளாதாரப் பணியின் 9 முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
தவிரவும், அடுத்தாண்டில் உள்நாட்டுத் தேவையை முக்கியமாக விரிவாக்க வேண்டும் என்பது இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய நுகர்வை நிலைநிறுத்துவதோடு புதிய ரக நுகர்வு முறையின் வளர்ச்சியை பலப்படுத்த வேண்டும். அதன் மூலம், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சீனச் சந்தையில் மேலதிக வாய்ப்புகள் கொண்டு வரப்படும்.
தற்போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி சில இன்னல் மற்றும் அறைகூவல்களை எதிர்கொண்டாலும், பொதுவாக கூறினால், அறைகூவலை விட, வாய்ப்பு மேலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.