உலகத்துக்குக் கூட்டு வெற்றி தரும் சீனாவின் சீர்த்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை
2023-12-19 10:28:07

சீர்த்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்தது முதல் இதுவரை,  வோக்ஸ்வேகன் வாகனம் சீன வானகத் துறையின் முக்கிய பங்குகளில் ஒன்றாகும். ஜெர்மனி வோக்ஸ்வேகன் வாகனக் குழுமத்தின் சீனாவுக்கான தலைமை செயலாளர் பிராண்ட்ஸ்டாட்டர் 18ஆம் நாள் கூறுகையில், சீனாவிலே சீனாவுக்காக என்ற நெடுநோக்குடன், எதிர்காலத்தில் உள்ளூர்  புத்தாக்க திறனை மேலும் நன்றாகப் பயன்படுத்திச் சீன நுகர்வோரின் தேவைகளை மேலும் சிறந்த முறையில் பூர்த்தி செய்ய நாங்கள் பாடுபடுவோம் என்றார்.

இவ்வாண்டு சீனாவின் சீர்த்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த 45ஆவது ஆண்டு நிறைவாகும். இக்கொள்கை சீனாவை ஆழமாக மாற்றியுள்ளதோடு, உலகத்துக்கும் கூட்டு வெற்றி பெறும் வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக கடந்த 10ஆண்டுகளில், உலகின் பொருளாதார மதிப்பில் சீனப் பொருளாதார பங்களிப்பு  12.3விழுக்காட்டிலிருந்து 18விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது.  உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான ஆண்டு சராசரி பங்களிப்பு விகிதம் 30விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.

அது மட்டுமல்ல, வெளிநாட்டுத் திறப்புக் கண்ணோட்டத்தில் ஊன்றி நின்று, திறப்புத் தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்க முயற்சி செய்து வரும் சீனா, உலக நிர்வாக முறைமைக்குப் புதிய முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்னெடுப்பு, கடந்த 10ஆண்டுகளில் டிரில்லியன் டாலரான முதலீட்டை ஈர்த்து இம்முன்னெடுப்பில் பங்கேற்கும் நாடுகளுக்கு 4லட்சத்து 20ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. சுமார் 4கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் உலக நிர்வாக கண்ணோட்டத்தை இது உயிர்த்துடிப்புடன் வெளிகாட்டியுள்ளது. உலக நிர்வாக முறைமையின் மேம்பாட்டை முன்னேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.