© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
புதிய புள்ளிவிவரங்களின்படி, சீனாவில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை, புதிதாக இயங்கத் தொடங்கிய அன்னிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 48 ஆயிரத்து 78ஐ எட்டியது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 36.2 விழுக்காடு அதிகம். உலகப் பொருளாதார மீட்சி மந்தமாக உள்ள நிலையில், ஈர்ப்பாற்றல் மிக்க சீனாவில் முதலீடு செய்வது, தற்போதைய முக்கியப் போக்காகும்.
இவ்வாண்டில் சீனாவின் அன்னிய முதலீட்டின் அமைப்பு முறையும் மேம்பட்டு வருகிறது. மருத்துவக் கருவிகள் தயாரிப்பு, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு, வடிவமைப்பு சேவை முதலிய துறைகளில், உள்ளபடியே அன்னிய முதலீட்டுப் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால், ஆய்வு மற்றும் வளர்ச்சி திசையை நோக்கி, அதிக அறிவியல் தொழில் நுட்பம் வாய்ந்த துறைகளில் அன்னிய வணிகர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இது, சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியின் தேவைக்குப் பொருந்தியது என்று நிபுணர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து முதலிய நாடுகள், சீனாவில் செய்த முதலீடு, முறையே 93.9, 93.2 மற்றும் 34.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, அன்னிய முதலீடு சீனாவிலிருந்து வெளியேறியது என்ற மேலை ஊடகங்களின் கூற்றுக்குப் புறம்பானது.
கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் நேரடி அன்னிய முதலீட்டின் இலாப விகிதம், 9.1 விழுக்காட்டை எட்டி, மற்ற நாடுகளில் இருந்ததை விட அதிகரித்தது. புதிய சீனக் கொள்கைகளின் செயலாக்கத்துடன், எதிர்காலத்தில் அன்னிய முதலீட்டு அளவு மேலதிகமாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மென்மேலும் அதிகமான அன்னிய முதலீட்டுக்குக் காரணம், சீனப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மீட்சியாகும். சீனா, உலகின் முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்பு மற்றும் உயிராற்றல்மிக்க சந்தையாகும்.