அமெரிக்காவில் ஆலை கட்டும் திட்டத்தை கைவிடுவதாக பானாசோனிக் அறிவிப்பு
2023-12-26 14:29:13

டெஸ்லா மோட்டார்ஸுக்கு மின்கலம் விநியோகிக்கும் நிறுவனமான ஜப்பானைச் சேர்ந்த பானாசோனிக் அண்மையில் வெளியிட்ட செய்தியின்படி, அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் மின்கலன் ஆலை கட்டும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதே மாதிரியான செய்திகள் தனியே அல்ல.

இவ்வாண்டில், தென் கொரியாவின் எல் ஜி, சீனாவின் தைவானைச் சேர்ந்த டி.எஸ்.எம்.சி. (TSMC), ஜப்பானின் ஹோண்டா (Honda), தென் கொரியாவின் எஸ்.கே. ஓன்SK Onஉள்ளிட்ட பிரபலமான சர்வதேச தொழில் நிறுவனங்கள், அமெரிக்காவில் ஆலைகளை கட்டும் திட்டத்தை கைவிடுவதாகவும் தள்ளிவைப்பதாகவும் முறையே அறிவித்துள்ளன.

தற்போது, தொழில் நிறுவனங்கள் அமெரிக்காவில் ஆலை கட்ட ஈர்க்கும் வகையில், அமெரிக்க அரசு ஊக்க நடவடிக்கைகளையும் மானியக் கொள்கைகளையும் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த பின்னணியில் இந்தத் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக சென்றிருக்க காரணம் என்ன

முதலில், முதலீடு மற்றும் உற்பத்தி செலவைப் பார்ப்போம். மின்கலனின் மூலப் பொருட்களைத் தோண்டுதல் மற்றும் பதனிடுதல் ஆகிய துறைகளில் வெளிநாட்டு இறக்குமதியை அமெரிக்கா நம்பியுள்ளது. மேலும், எரியாற்றல், நிலம், உழைப்பு ஆற்றல் போன்ற துறைகளில் அமெரிக்காவுக்கு அதிக செலவு உள்ளது.

இரண்டாவதாக, முதலீட்டு வருமானத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா அளவில் உயர்தர மின்சார வாகனம் மீதான தேவை குறைந்து வருவதாக ஜப்பானைச் சேர்ந்த பானாசோனிக் இவ்வாண்டின் அக்டோபரில் தெரிவித்தது. மேலும், அந்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான அதிவேக மின்னூட்டு சாதனம் போன்ற துணை சாதனங்கள் மோசமாக உள்ளன. மின் கட்டண உயர்வு, மின் வலைபின்னல் நிலையற்ற இயக்கம் முதலிய காரணங்களால், அமெரிக்க நுகர்வோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.

தவிரவும், வரலாற்றில் கண்டிராத அமெரிக்காவின் கடன், உயர் அளவில் உள்ள பண வீக்கம் , தயாரிப்புத் தொழிலில் வேலை நிறுத்தம் முதலிய காரணங்களால், அமெரிக்காவின் வணிகச் சூழல்நிலை மீது தொழில் நிறுவனங்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா பொருளாதாரப் பிரச்சினையை அரசியல் மயமாக்குவதால், தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையும் உற்சாகமும் குறைந்து வருகின்றது.