செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்: சீன நாகரிகத்தின் உள்ளடக்கம்
2023-12-29 11:26:58

பண்டைய சீனாவின் தலைநகராக சியான் நகர் இருந்துள்ளது. இந்நகர், பட்டுப்பாதையின் தொடக்கமாகவும், கிழக்கு-மேற்கு நாகரிகங்களின் இணைப்பாகவும் திகழ்கிறது. சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் முன்மொழிவு உலக அளவில் அதிக வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சர்வதேச பரிமாற்றத்தில் சியான் மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளதுடன் சீனாவை உலகுடன் இணைக்கும் முக்கிய ஜன்னலாகவும் மாறியுள்ளது.

நீண்ட காலத்திற்கு முன்பு சாங்ஆன் என அழைக்கப்பட்ட சியானில் நாங்கள் இருக்கின்றோம். இது பண்டைய பட்டுப்பாதையின் தொடக்கப் புள்ளியாகும்.

சீன நாகரிகம் எப்படி இவ்வளவு காலத்துக்கு முன்பே இத்தகைய உள்ளடங்கிய தன்மையைக் கொண்டிருந்தது? சீன வரலாற்றின் தொடக்கத்தில் பல வேறுபட்ட மக்கள் மற்றும் கலாசாரங்களின் இருப்பானது உள்ளடங்கிய தன்மை என்பதற்கு ஒரு பெரிய பங்களிப்பாக அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பண்டைய பட்டுப்பாதை கிமு 200இல் தொடங்கி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது.

அந்த பட்டுப் பாதையில் பொருள்கள் மட்டும் பரிமாறப்படவில்லை, பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகள் என பல விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. டங் வம்சத்தில் கூட பல வெளிநாட்டினர் வந்தனர், அவர்களில் சிலர் நீண்ட காலம் தங்கி அரசவையில் அதிகாரிகளாகவும் பணியாற்றினர். சாங் ஆனுக்கு வந்த வெளிநாட்டினரின் வாழ்க்கை உண்மையில் பாதிக்கப்படவில்லை. சீனாவில் இருந்தாலும் தங்கள் சொந்த கலாசாரங்களையும் பழக்கவழக்கங்களையும் அவர்களால் பின்பற்ற முடிந்தது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு 2013இல் தொடங்கப்பட்டது. அது, பெரும்பாலும் பொருளாதாரத்தை மையப்படுத்தியது. ஆனால் வெவ்வேறு நாடுகளுக்கு இடையிலான இந்த பரந்த பொருளாதார ஒத்துழைப்பின் விளைவாக கலாசாரத் தொடர்புகள் ஏற்படும் என்று நம்புகின்றேன். அது, வெவ்வேறு இடங்களையும் மக்களையும் ஒருங்கிணைத்து செழிப்பை உருவாக்க முயற்சிக்கிறது.  இன்றைய உலகில், கலாசாரங்களுக்கு இடையில் பரிமாற்றங்களை எவ்வாறு ஊக்குவிப்பது, இணக்கமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உலகை ஒருங்கிணைப்பதில் வெவ்வேறு நாகரிக ஆற்றல்களை எவ்வாறு திரட்டுவது போன்ற சவால்களை எதிர்கொண்டுள்ளோம். "வேற்றுமையில் நல்லிணக்கம்" என்ற சீன ஞானம் மனித நாகரிகங்களின் முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்கு மிகவும் வெளிப்படையான உலகத்தையும் அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தையும் உருவாக்குவதற்குத் துணை புரியும்.