© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அல்ஜீரியாவில் பல குழந்தைகளுக்கு சினோவா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பெயரின் பொருள் சீனர். 1963ஆம் ஆண்டு அல்ஜீரியாவுக்கு முதலாவது சர்வதேச மருத்துவ உதவிக் குழுவை சீனா அனுப்பிய பிறகு, அந்நாட்டில் 20 லட்சத்துக்கு 70 ஆயிரத்துக்கும் மேலான குழந்தைகள் சீன மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் பிறந்தனர். 2 கோடியே 70 லட்சத்துக்கும் மேலான நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 60 ஆண்டுகளில் சீனாவின் சர்வதேச மருத்துவ உதவிக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
சீனாவின் முதலாவது சர்வதேச மருத்துவ உதவிக் குழு அனுப்பப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவு மற்றும் பாராட்டு மாநாடு அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த சர்வதேச மருத்துவ உதவிப் பணியை சீனத் தலைவர்கள் வெகுவாக பாராட்டியதோடு, சீன மருத்துவப் பணியாளர்கள் மனிதகுலத்துக்கான பொது சுகாதார சமூகத்தின் உருவாக்கத்துக்கு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்றும் ஊக்கமளித்தனர்.
சர்வதேச மருத்துவ உதவியில் 60 ஆண்டுகளாக சீனா ஈடுபட்டுள்ளது. முழு உலகத்தையும் கருத்தில் கொள்வது இதற்குக் காரணமாகும். எபோலா வைரஸ் தடுப்பில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவியளித்தது, கொள்ளை நோய், ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தடுப்பில் பல நாடுகளுக்கு உதவியளித்தது, நோய் கட்டுப்பாட்டுக்கான ஆப்பிரிக்க மையத்தின் கட்டுமானத்துக்கு ஆதரவளித்தது, தொற்றுநோய் தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்வது ஆகியவற்றில் ஈடுபட்டு, உள்ளூர் மக்களுக்கு நன்மைபுரிந்து வரும் சீனாவின் மருத்துவ உதவிக் குழு, அந்நாடுகளின் அரசு மற்றும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
தற்போது, உலகளவில் மிகப்பெரிய வளரும் நாடான சீனா, சொந்த வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும் அதேவேளை, சொந்த வளர்ச்சியை வாய்ப்பாகக் கொண்டு, இதர வளரும் நாடுகள் நவீனமயமாக்கத்தை நனவாக்குவதற்கு உதவியளித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு மருத்துவ உதவிக் குழுவை அனுப்புவது சீனாவின் உதவியில் முக்கியமான ஒரு பகுதியாகும்.