சீனா மீது கருத்தியல் போர் நடத்தி வரும் அமெரிக்கா
2024-01-04 09:47:37

சீனா தொடர்பான எதிர்மறை செய்திகளை உருவாக்க செய்தியாளர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கு 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்யும் சட்ட முன்மொழிவு ஒன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளதாக ஐரோப்பிய அறிஞர் ஜான் ஓபர்க் அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது வெளிப்படுத்தினார். அமெரிக்கா 2021ஆம் ஆண்டு ஏப்ரல் நிறைவேற்றப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான நெடுநோக்கு போட்டிச் சட்ட முன்மொழிவு அவரின் இக்கூற்றுக்குப் பொருத்தமாக உள்ளது.

இச்சட்ட முன்மொழிவின்படி, 2022முதல் 2026ஆம் நிதியாண்டு வரை, சீனாவின் உலகளாவிய செல்வாக்குக்கு எதிராக, ஒவ்வொரு ஆண்டிலும் 30கோடி அமெரிக்க டாலரை அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், சீனாவின் சின்ஜியாங் பற்றி 20க்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் சின்ஜியாங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவின் மீது அமெரிக்கா கருத்தியல் போர் நடத்துவதன் வழிமுறை இதன் மூலம் பகுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், சீனா அதன் மிகப் பெரிய நெடுநோக்குப் போட்டியாளராகுவதை அமெரிக்கா தவறாகக் கருத்தில் கொண்டுள்ளது. சீனாவின் மீது பன்முகங்களிலும் அடக்குமுறை மேற்கொண்டுள்ளது. கருத்தியல் மற்றும் அறிதிறன் ரீதியான போர் வரலாற்றில் இல்லாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு, சீனப் பொருளாதாரம், சின்ஜியாங் உள்ளிட்ட கருப்பொருட்கள், சீனா மீது அமெரிக்கா அவதூறு பரப்பியுள்ள முக்கிய அம்சங்களாக மாறியுள்ளன.