அமெரிக்க பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்: அமெரிக்க அரசு கடன்
2024-01-05 12:13:56

அமெரிக்க நிதி அமைச்சகம் ஜனவரி 2ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, அமெரிக்க அரசு கடனின் மொத்த தொகை, 34 இலட்சம் கோடி அமெரிக்க டாலராக புதிய உச்சத்தை தொட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதி வரவு செலவு அலுவலகம் முன்மதிப்பீடு செய்துள்ள இந்த கடன் அளவு 5 ஆண்டுகாலத்திற்கு முன்னதாகவே எட்டியுள்ளது.

34 இலட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு கடன் குறித்து அமெரிக்காவின் தொடர்புடைய நிறுவனம் மதிப்பீடுகளின்படி, இந்த குறியீட்டு எண், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட 20 விழுக்காடு அதிகமாகும். ஒவ்வொரு அமெரிக்க மக்களுக்கும் சுமார் ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதார மற்றும் வளர்ச்சிக்கு இவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய போக்கின்படி, ஒவ்வொரு ஆண்டிலும், 2 இலட்சம் அமெரிக்க டாலருக்கும் மேலான அமெரிக்க அரசு கடன் உயரக் கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். ஒரு கடனை அடைக்க மீண்டும் கடன் வாங்குவது போன்ற பனிப்பந்து பெருகி வருவதால், அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கத்தை தவிர்க்க முடியாது. தொடர்ந்து அதிகரித்து வரும் அரசு கடன், அமெரிக்க பொருளாதாரத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்று பீட்டர்சன் நிதியம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடனைத் திருப்பிச் செலுத்தாத நெருக்கடி இருந்தால், கடும் பின்விளைவு ஏற்படும். இதனால், அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் யெல்லன் அம்மையார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இந்நிலையில், உலகப் பொருளாதார பாதுகாப்புக்கு கடும் இடர்பாடு யார் என்ற கேள்விக்கு பதில் பதில் தெளிவானது.