ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து முன்கூடியே விலகுவதாக மிஷேல் அறிவிப்பு
2024-01-08 20:45:28

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷேல் தனது பதவிக்காலம் முடியும் முன்பே பதவியிலிருந்து விலகுவதாக ஜனவரி 7ஆம் நாள் அறிவித்தார். இவ்வாண்டின் ஜுன் 6முதல் 9ஆம் நாள் நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பெல்ஜியத்தின் தாராளவாத சீர்திருத்த இயக்கக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளதால் இம்முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கைகள் முக்கிய தருணத்தில், அவரின் இந்த முடிவு பொறுப்பற்றது என்று ஐரோப்பிய ஊடகங்களால் அவர் விமர்சிக்கப்படுகிறார்.