சீன-அமெரிக்க இளைஞர் பரிமாற்றம் இரு நாட்டுறவுக்கு புதிய சக்தி கொண்டு வந்தது:சீனா
2024-01-09 19:26:27

அண்மையில் சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மேசை பந்தாட்ட அணிகள் மற்ற தரப்பின் நாட்டில் பயணம் மேற்கொண்டன. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் 9ஆம் நாள் கூறுகையில்,

மேசை பந்தாட்ட துறையில் சீன மற்றும் அமெரிக்க இளைஞர்கள், இரு நாட்டு அரசு சாரா பரிமாற்றத்துக்கு புதிய சக்தி ஊட்டுகின்றனர் என்றார். மேலும், சீன-அமெரிக்க உறவின் நம்பிக்கை, இரு நாட்டு மக்களிடம் உள்ளது. உறவின் ஆதாரம் அரசு சாரா துறைகளிடையே உள்ளது. எதிர்காலம், இரு நாட்டு இளைஞர்களிடம் உள்ளது. உயிராற்றல், பல்வேறு இடங்களில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.