ஐன்ஸ்டீன் ப்ராப் என்ற புதிய எக்ஸ்ரே செயற்கைக்கோளை சீனா ஏவியது
2024-01-09 20:38:16

செவ்வாய்க்கிழமை தென்மேற்கு சீனாவில் உள்ள சிட்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா ஒரு புதிய எக்ஸ்ரே செயற்கைக்கோளை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

பிற்பகல் 3:03 மணிக்கு, லாங் மார்ச்-2சி ஏவூர்தி மூலம் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோளில் ஐன்ஸ்டீன் ஆய்வுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி அண்ட நிகழ்வுகளிலிருந்து வரும் தொலைதூர ஃப்ளாஷ்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.