விமானப் பணியாளர்களுக்கான மேலாண்மை முறைமை மாற்றம்
2024-01-09 19:40:27

இந்தியாவில் விமானப் பணியாளர்களின் ஓய்வு நேரத்தை அதிகரித்து அழுத்தத்தைக் குறைக்கும் விதம், பணி நேரக் கட்டுப்பாட்டில் முக்கிய மாற்றத்தை விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் மேற்கொண்டுள்ளது.

புதிய மாற்றத்தின்படி, வார ஓய்வு நேரம் 36 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாக இருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இரவுப் பணி என்பதில் இரவு என்பதற்கு நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. முன்பு, இது நள்ளிரவு 12 முதல் காலை 5 மணி என்று இருந்தது.

விமானப் பணியாளர்கள் பயணச் சோர்விலிருந்து மீளும் விதம் இத்தகைய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.