2023ஆம் ஆண்டில் 19 லட்சம் கொள்கலன்களைக் கொண்டு சென்ற சீன-ஐரோப்ப சரக்கு தொடர்வண்டிகள்
2024-01-09 11:51:43

2023ஆம் ஆண்டில் சீன இருப்புப்பாதை குழுமம், இருப்புப்பாதை திட்டமிடல் கட்டுமானம், சரக்கு போக்குவரத்து சேவை ஆகியவற்றை வலுப்படுத்தி, விரிவான ஆலோசனை, கூட்டு பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகள் என்ற கொள்கையைப் பேணி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியின் கூட்டு கட்டுமானத்தின் உயர் தர வளர்ச்சியில் புதிய சாதனைகளை அடைய ஊக்குவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் சீன-ஐரோப்ப சரக்கு தொடர்வண்டிகள் 17 ஆயிரம் முறையாக இயங்கி, 19 லட்சம் கொள்கலன்களை கொண்டு சென்றன. இது 2022ஆம் ஆண்டை விட முறையே 6 சதவீதம் மற்றும் 18 சதவீதம் அதிகமாகும். மேற்குப் பகுதியில் தரை-கடல் புதிய வழிப்பாதையின் மூலம் சரக்கு தொடர்வண்டிகள் 8 லட்சத்து 60 ஆயிரம் கொள்கலன்களை கொண்டு சென்றன. இது 2022ஆம் ஆண்டை விட 14 சதவீதம் அதிகரித்துள்ளது. பழைய புரட்சிகர பகுதிகள், சிறுபான்மை இன பகுதிகள், எல்லைப் பகுதிகள், வறுமை ஒழிப்பு பகுதிகள் ஆகியவற்றில், இருப்புப்பாதையின் அடிப்படை கட்டுமானத்துக்காக 40760 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் மேலும் 22 மாவட்டங்களில் இருப்புப்பாதை சேவை இயங்க தொடங்கியுள்ளது.