சீன-அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் 17வது பணிக் கூட்டம்
2024-01-10 16:53:48

ஜனவரி 8ஆம் நாள் முதல் 9ஆம் நாள் வரை, அமெரிக்காவின் வாஷிங்டனில், சீன-அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் 17வது பணிக் கூட்டம் நடைபெற்றது. சீன மத்திய ராணுவ ஆணையத்தின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு அலுவலகத்தின் தலைவர் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை உதவி அமைச்சர் ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.

சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் அமெரிக்காவுடன், சீரான மற்றும் நிலையான இராணுவ உறவுகளை வளர்த்து, இரு நாட்டுத் தலைவர்கள் சான் பிரான்சிஸ்கோ சந்திப்பில் இராணுவம் தொடர்பாக எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை கூட்டாக செயல்படுத்த விரும்புவதாக சீனா தெரிவித்தது. சீனாவின் முக்கிய கவலைகளில் அமெரிக்கா கவனம் செலுத்தி, இரு நாட்டு இராணுவ உறவுகளின் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்க வேண்டும்.

தைவான் பிரச்சினையில் ஒருபோதும் சமரசம் செய்யவோ அல்லது பின்வாங்கவோ மாட்டோம். அமெரிக்கா ஒரே சீனா கொள்கையைக் கடைபிடித்து, ‘தைவான் சுதந்திரத்தை’ எதிர்க்க வேண்டும் என்று சீனா கோரியது. தென் சீன கடலில் அமெரிக்கா தனது ராணுவ களமிறக்கம் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை குறைக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியது.