7ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் 300 நிறுவனங்கள் சேர்தல்
2024-01-10 11:41:23

6ஆவது சீனச் சர்வதே இறக்குமதி பொருட்காட்சி பரவல் செல்வாக்கு பற்றிய அறிக்கை ஜனவரி 9ஆம் நாள் வெளியிடப்பட்டது. மேலும், 7ஆவது பொருட்காட்சிக்கான உடன்படிக்கையில் நிறுவனங்கள் கையொப்பமிடும் விழா ஷாங்காய் நகரிலுள்ள தேசிய பொருட்காட்சி மையத்தில் நடைபெற்றது.

இவ்வறிக்கையின்படி, 6ஆவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, பல்வகை பரவல் வழிகளின் மூலம், பரவுகின்ற பரப்பளவு சுமார் 200 கோடி மக்கள் தொகையாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவுக்கான முக்கிய அம்சங்களில் 6ஆவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி சேர்ந்துள்ளது.

இது வரை, சுமார் 300 நிறுவனங்கள்  7ஆவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் பங்கேற்க கையெழுத்திட்டுள்ளன. ஒரு இலட்சத்து 30 ஆயிரம் சதுர மீட்டர் இப்பொருட்காட்சி பரப்பளவில் அமைய உள்ளது.