2023ஆம் ஆண்டின் நவம்பரில் அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக பற்றாக்குறை 6320 கோடி அமெரிக்க டாலர்
2024-01-10 09:19:02

அமெரிக்க பொருளாதார பகுப்பாய்வு பணியகம் மற்றும் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டின் நவம்பரில் அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக பற்றாக்குறை 6320 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது 2023ஆம் ஆண்டின் அக்டோபரில் இருந்த 6450 கோடி டாலரை விட குறைவாகும். 2023ஆம் ஆண்டின் நவம்பரில் அமெரிக்காவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை முறையே 25 ஆயிரத்து 370 கோடி டாலர் மற்றும் 31 ஆயிரத்து 690 கோடி டாலரை எட்டியுள்ளது.