ஆர்.சி.இ.பி. பல்வேறு தரப்புகளுக்கு நலன்களை கொண்டு வந்தது:சீனா
2024-01-10 19:47:50

ஆர்.சி.இ.பி. எனும் பிராந்திய பன்முகப் பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் அமலுக்கு வந்த 2 ஆண்டுகால சாதனைகள் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ்நிங் 10ஆம் நாள் கூறுகையில், கடந்த இரு ஆண்டுகளில், பிராந்திய வர்த்தக உற்பத்தி செலவு பெரிதும் குறைந்து, தொழில்துறை சங்கிலி மற்றும் விநியோக சங்கிலி இடையேயான உறவு மேலும் நெருக்கமாக வளர்ந்துள்ளது. ஒப்பந்தத்தில் பங்கெடுத்துள்ள பல்வேறு தரப்புகள் அதிக நலன்களைப் பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், பிராந்திய ஒருமைப்பாட்டு கட்டுமானத்துக்கு மைல் கல் சார் முக்கிய சாதனையாக, ஆர்.சி.இ.பி. ஒப்பந்தமானது, பிராந்திய நாடுகள் கூட்டு வளர்ச்சி வாய்ப்பை அனுபவிப்பதற்கு ஒரு உண்மையான மாதிரியாகத் திகழ்கிறது. இந்த ஒப்பந்தத்தில் மிகப் பெரிய பொருளாதார நாடான சீனா, திறந்த வளர்ச்சி கருத்தைப் பின்பற்றி, ஆர்.சி.இ.பி.இன் செயல்பாட்டை முன்னேற்றி வருகின்றது என்று மாவ்நிங் தெரிவித்தார்.