அமெரிக்கா-தைவான் அதிகாரப்பூர்வ தொடர்புக்கு சீனா எதிர்ப்பு
2024-01-10 19:24:00

ஜனவரி 10ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தைவானிடையேயான தொடர்பு பற்றிய கேள்விக்குப் பதிலளித்தார்.

உலகில் ஒரு சீனா மட்டுமே உள்ளது. தைவான், சீனாவில் பிரிக்கப்படாத ஒரு பகுதியாகும். அமெரிக்கா தைவானுடன் எந்த வடிவங்களிலும் அதிகாரப்பூர்வ தொடர்பை மேற்கொள்வதற்கு சீனா உறுதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தைவானின் பிரிவினை சக்திகளுக்கு தவறான சமிக்கை அனுப்பக் கூடாது. எந்த வடிவத்திலும் தைவான் பிரதேசத்தின் தேர்தலில் தலையிடக் கூடாது என்று மாவ்நிங் தெரிவித்தார்.