2024-இல் தீவிர வான்னிலை அயாயங்களை எதிர்கொள்ளும் திறனை பலப்படுத்தும்: சீனா
2024-01-10 19:57:08

2024ஆம் ஆண்டில் தீவிர வானிலை அபாயங்களை எதிர்கொள்வதற்கான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை திறனை சீனா பலப்படுத்துவதோடு, வானிலை ஆய்வு வழியாக பேரழிவு குறைப்பு பணியைச் செவ்வனே மேற்கொள்ள உள்ளது.

10ஆம் நாள் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான சீன வானிலைப் பணிக் கூட்டத்தில், சீன வானிலைப் பணியகத் தலைவர் ட்சென் ஜென்லின் இதனைத் தெரிவித்தார்.

தவிர, 2023ஆம் ஆண்டில் வானிலைப் பணியில் படைத்த சாதனைகள் பற்றி அவர் கூறுகையில்,

கடந்த ஆண்டில், சீனாவில் சூறாவளி நகரும் திசையை மதிப்பிடுவதில் ஏற்பட்ட பிழை வரம்பு 62கிலோமீட்டர் அளவு இருந்தது. இது, வரலாற்றில் சிறந்த சாதனையாகும். பலத்த மழைக்கான 24மணிநேர முன்னறிவிப்பு துல்லியமாக வெளியிடும் விகிதம் முன்பு கண்டிராத உயர்வை அடைந்தது.

வலுவான வெப்ப வானிலை நிகழ்வுக்கான முன்னெச்சரிக்கை முன்பை விட முன்கூட்டியே 43 நிமிடம் அளவுக்கு விடப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.