காசா பகுதியில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குக் கடும் ஊட்டச்சத்துக் குறைபாடு
2024-01-10 09:25:08

யுனிசெப் அமைப்பு ஜனவரி 9ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, தற்போது காசா பகுதியில் பஞ்ச அபாயம் அதிகரித்து வருகிறது. உள்ளூரில் 5 வயதிற்குட்பட்ட 3 இலட்சத்து 35 ஆயிரம் குழந்தைகள் கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர்.

இந்த குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஆதரவைப் பெறுவதற்காக, மனித நேயப் போர் நிறுத்தம் உடனடி தேவை என்று சமூகச் செய்தி ஊடகங்களில் யுனிசெப் தெரிவித்துள்ளது.