சீனாவின் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை முறையே 3 கோடியைத் தாண்டியது
2024-01-11 16:52:05

சீன வாகன தயாரிப்புச் சங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை முறையே 3 கோடியே 1 லட்சத்து 61 ஆயிரம் மற்றும் 3 கோடியே 94 ஆயிரத்தை எட்டியது. இது 2022ஆம் ஆண்டை விட முறையே 11.6 சதவீதம் மற்றும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், 49 லட்சத்து 10 ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 2022ஆம் ஆண்டை விட 57.9 சதவீதம் அதிகமாகும். சீனா உலகின் மிகப் பெரிய வாகன ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில், சீனா உலகின் இரண்டாவது பெரிய வாகன ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது.

தற்போது புதிய ஆற்றல் வாகனம், சீனாவின் வாகன தயாரிப்பு துறையில் முக்கிய வளர்ச்சி பகுதியாக மாறி, ஏற்றுமதியை குறிப்பிடத்தக்க அளவு ஊக்குவித்துள்ளது. சீனாவில் 12 லட்சத்து 3 ஆயிரம் புதிய ஆற்றல் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, முந்தைய ஆண்டை விட 77.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் 4வது காலாண்டில், சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம், உலகின் மிகப் பெரிய மின்சார ஆற்றல் வாகனத்தின் தயாரிப்பு நிறுவனமாக மாறியது.