சீனாவுக்கு வரும் வெளிநாட்டு மக்களுக்கான 5 புதிய வசதிகள்
2024-01-11 14:19:33

சீனாவிற்கு வரும் வெளிநாட்டு மக்கள் வசதிக்காக, 5 புதிய கொள்கைகள் ஜனவரி 11ஆம் நாள் முதல் அமலுக்கு வருமென சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு வரும் வெளிநாட்டு மக்களின் விசா விண்ணப்பத்துக்கான நிபந்தனையைத் தளர்த்துதல், பெய்ஜிங் தலைநகர் விமான நிலையம் உள்ளிட்ட நுழைவாயில் 24 மணிநேரத்தில் பரிசோதனையின்றி நேரடியாக எல்லையைக் கடந்து செல்லுதல், சீனாவில் தங்கும் வெளிநாட்டு மக்கள் விசா நீட்டிப்பு மற்றும் விசா மாற்றத்திற்கு விண்ணப்பிகலாம். பன்முறையான எல்லை நுழைவு தேவைப்படும் வெளிநாட்டு மக்கள் மீண்டும் நுழைவுக்கான விசாவை விண்ணப்பிக்கலாம். சீனாவில் தங்கும் வெளிநாட்டு மக்களின் விசா விண்ணப்பத்துக்கான தகவல்களைக் குறைத்தல் ஆகியவை இவற்றில் அடங்கும்.