சீன மற்றும் அமெரிக்க வணிகத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
2024-01-11 19:53:51

ஜனவரி 11ஆம் நாள் சீன வணிகத் துறை அமைச்சர் வாங்வென்தாவும் அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஜினா ரைமொன்டோ அம்மையாரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். சீனா-அமெரிக்கா தலைவர்கள் சன்ஃபிரான்சிஸ்கோ சந்திப்பில் உருவாக்கிய முக்கிய ஒத்த கருத்துக்களை நிறைவேற்றுவதை சுற்றி, அவர்கள் தத்தமது கவனம் செலுத்தும் பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகளைப் பற்றி ஆழமாகவும் பயனுள்ளதாகவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக துறையில் நாட்டு பாதுகாப்பு எல்லை பிரச்சினை பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.