சீனத் தலைமையமைச்சரின் ஜனவரி மாதப் பயணம்
2024-01-11 19:51:35

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், 2024-ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும், சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்தில் ஜனவரி 14 முதல் 17ஆம் நாள் வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் 11ஆம் நாள் வியாழக்கிழமை தெரிவித்தார்.

உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான கிளாஸ் ஸ்வாபு, சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் வயோலா அம்ஹெர்ட் மற்றும் அயர்லாந்து தலைமையமைச்சர் லியோ வரத்கர் ஆகியோரின் அழைப்பின் பேரில் இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும் மாவ்நிங் கூறினார்.