சீன வெளியுறவு அமைச்சர் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்வார்
2024-01-11 19:14:18

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 2024ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 18ஆம் நாள் வரை எகிப்து, துர்னிஸ், தொகோ, கொட்தீவா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது, சீன வெளியுறவு அமைச்சர் 34ஆவது ஆண்டாக ஆண்டின் துவக்கத்தில் தொடர்ச்சியாக ஆப்பிரிக்காவில் முதல் பயணத்தை மேற்கொள்வதாக உள்ளது. அதற்கு பின், வாங்யீ பிரேசிலும் ஜமைக்காவிலும் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 11ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.