ஜோர்டான், எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்க வலியுறுத்தல்
2024-01-11 11:00:45

உள்ளூர் நேரப்படி ஜனவரி 10ஆம் நாள், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, எகிப்து அரசு தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பாலஸ்தீன அரசு தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோர், தெற்கு ஜோர்டானிலுள்ள அகாபா நகரில் பேச்சுவார்த்தை நடத்தி, காசா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்க முடிவு செய்தனர்.

ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டங்களுக்கு மூன்று தலைவர்களும் தீவிரமாக எதிர்த்து, இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் கண்டனம் மற்றும் நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினர்.

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக, அரபு நாடுகளுடன் ஒருங்கிணைந்து, கூட்டு முயற்சிகளைத் தொடர்ந்து எடுக்கவும் மூன்று தரப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன.