மியன்மாரின் வடக்குப் பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கை உருவாக்கம்
2024-01-12 17:44:52

மியன்மாரின் வடக்குப் பகுதியில் உள்ள மூன்று அரசு சாரா ஆயுதக் குழுக்களுக்கும் அந்நாட்டு அரசு இராணுவப் படைக்கும் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை ஜனவரி 10, 11 ஆகிய இரு நாட்களில் சீனாவின் குவன்மிங் நகரில் நடைபெற்றது. இது பற்றிய விவரங்களை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 12ஆம் நாள் அறிமுகம் செய்தார்.

சீனாவின் இணக்க முயற்சியுடன், குவன்மிங்கில் நடைபெற்ற அமைதிக்கான பேச்சுவார்த்தையில், மியன்மார் அரசு இராணுவப்படைக்கும் மூன்று ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை உருவாக்கியுள்ளதாக மாவ்நிங் தெரிவித்தார்.

மேலும், தொடர்புடைய தரப்புகளின் இராணுவ வீரர்கள் தொடர்பை நிறுக்கவும், சண்டைகளும் கோரிக்கைகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

தவிரவும், மியன்மாரின் வடக்குப் பகுதியில் போர் நிறுத்துவதோடு அமைதிக்கான பேச்சுவார்த்தையை நடத்துவதே, மியன்மாரின் பல்வேறு தரப்புகளின் நலன்களுக்குப் பொருத்தமானதாக உள்ளது. இது சீன-மியன்மார் எல்லைப் பகுதியின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கவும் துணைபுரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.