பிரதேச நிலைமை குறித்து ஈரான் மற்றும் சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனை
2024-01-12 09:45:28

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஜனவரி 11ஆம் நாள் சௌதி அரேபிய  வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்துடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு உரையாடினார்.

இந்த உரையாடலின் போது பிரதேச நிலைமை குறித்து, அப்துல்லாஹியான் கூறுகையில், காசா மோதலை நிறுத்தி, காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சௌதி அரேபியாவில் நடந்த கூட்டத்தை ஈரான் ஆதரிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், இந்தச் சுற்று பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் நிகழ்ந்த பிறகும் கூட, மோதலை நிறுத்த அமெரிக்கா ஒருபோதும் விருப்பம் காட்டவில்லை என்பதை அவர் கண்டித்தார்.

ஈரான் அரசுத் தலைவர் சையத் இப்ராஹிம் ரைசி செளதி அரேபியாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஃபைசல், காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த, சௌதி அரேபியா தொடர்ந்து பாடுபடும் என்றார் அவர்.