2023ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 211.4 சதவீதம்
2024-01-12 09:53:40

ஜனவரி 11ஆம் நாள், அர்ஜென்டின தேசிய புள்ளிவிவர பணியகம் வெளியிட்ட உள்நாட்டுப் பொருளாதார நிலைமை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டின் டிசம்பரில் அர்ஜென்டினாவின் மாதாந்திர பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தை விட 25.5 சதவீதம் அதிகரித்தது. 2023ஆம் ஆண்டில் அதன் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 211.4 சதவீதத்தை எட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டின் டிசம்பரில், அர்ஜென்டினாவில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள், நவம்பர் மாதத்தை விட 32.7 சதவீதம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மருத்துவ சுகாதார சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகளின் கட்டணங்கள், முறையே 32.6 சதவீதம் மற்றும் 31.7 சதவீதம் அதிகமாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.