அழகான சீனாவின் கட்டுமானம் பற்றிய முன்மொழிவுகள்
2024-01-12 11:22:34

அழகான சீனாவை உருவாக்குவது சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கான முக்கிய நோக்கமாகும். சீன தேசத்தின் மறுமலர்ச்சி மற்றும் சீனக் கனவை நனவாக்குவதற்கான முக்கிய பகுதியுமாகும். அழகான சீனாவின் கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்றி மனிதர் மற்றும் இயற்கையுடனான நல்லிணக்க வாழ்வுடன் கூடிய நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்தும் விதம், சீனா 4 முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.

முதலாவதாக, 2027ஆம் ஆண்டு, உயிரின சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு முறையை மேலும் முழுமைப்படுத்த வேண்டும். அழகான சீனாவின் கட்டுமானத்தில் முன்னேற்றங்களை அடைந்த சில முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும்.

இரண்டாவதாக, 2035ஆம் ஆண்டில், உயிரின சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு முறை மற்றும் செயல் திறனின் நவீனமயமாக்கம் அடிப்படையில் நனவாக்கப்பட வேண்டும். அழகான சீனாவின் கட்டுமானம் அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

மூன்றாவதாக, நடப்பு நூற்றாண்டின் மத்தியில், உயிரினச் சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு முறை மற்றும் செயல் திறனின் நவீனமயமாக்கம் பன்முகங்களிலும் நனவாக்கப்பட வேண்டும். அழகான சீனாவின் கட்டுமானமும் பன்முகங்களிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

நான்காவதாக, நாடளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிவப்புக் கோட்டின் பரப்பளவை 31 இலட்சத்து 50ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கு மேல் நிலைப்படுத்த வேண்டும். 12லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான விளைநிலத்தை உறுதியாக பேணிக்காக்க வேண்டும்.