வரவேற்பைப் பெற்றுள்ள சீன வாகனங்கள்
2024-01-12 20:06:35

சீன வாகன தயாரிப்புச் சங்கம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி2023ஆம் ஆண்டில் சீனாவின் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3கோடியைத் தாண்டியுள்ளன. இவை தொடர்ந்து 15ஆண்டுகளாக உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. இதில், வாகனங்களின் ஏற்றுமதி அளவு 49இலட்சத்து 10ஆயிரத்தை எட்டியது. இது தொடர்பாக, , சீனா ஜப்பானைத் தாண்டி, உலகளவில் மிக அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளதை மேற்கூறிய தரவுகள் குறிக்கிறது என்று ஜப்பானிய செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தெரிவித்துள்ளன. தவிரவும், சீனா, வாகனத்துறை சார் வலுவான நாடாக முக்கிய இடத்தில் உள்ளதாக ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில் தெரிவித்தன.

உலகளவில் சீன வாகனங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளதன் காரணம் என்ன

முதலில், கடந்த சில ஆண்டுகளில், சீன வாகனங்களின் செயல் திறன் மற்றும் தரம் தொடர்ந்து மேம்பாடு அடைந்துள்ளது. குறிப்பாக, சீனாவின் சொந்த தொழில் சின்னமுடைய வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தொழில் நுட்ப புத்தாக்கம் மூலம் புதிய எரியாற்றல் வாகனங்களை பெரிதும் வளர்த்து, வெளிநாட்டு சந்தையில் நுழைந்து, வாகனங்களின் ஏற்றுமதி அளவை முன்னேற்றி வருகின்றன. சீனாவின் சொந்த தொழில் சின்னமுடைய புதிய எரியாற்றல் வாகனங்களின் விற்பனை அளவில் முதல் பத்து இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள்உலகளவில் கொண்டுள்ள காப்புரிமைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டிஆண்டுதோறும் விரைவாக அதிகரித்து வருகின்றது.

தவிரமுழுமையான தொழில்துறை சங்கிலி மற்றும் விநியோக சங்கிலி கொண்டுள்ளதால்சீன வாகனங்களின் போட்டியாற்றல் வலுப்படுத்துகின்றது.