சீன ஊடகக் குழுமத்துக்கு மாலத் தீவின் அரசுத் தலைவர் அளித்த பேட்டி
2024-01-13 19:28:34

மாலத் தீவின் அரசுத் தலைவர் முகமது முய்சு, 2024ஆம் ஆண்டில் சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசுத் தலைவர் ஆவார். மேலும், அவர் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு வெளிநாட்டில் அரசு முறை பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். 

சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், கடந்த பல ஆண்டுகளாக மாலத் தீவுக்கு ஆதரவு அளித்து வருகின்ற சீனாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், சீன-மாலத் தீவு நட்புறவு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. 10 ஆண்டுகளுக்கு முன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ஒத்துழைப்பு நிலைமை புதிய கட்டத்தில் உள்ளது. எனது இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டுறவு, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவாக உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகள் மேலும் உயர்தர ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும் என்பதை இது காட்டுகிறது. இரு நாட்டு மக்கள், இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளி உறவிலிருந்து பயனடைய உள்ளனர் என்றார்.

மேலும், இரு நாடுகளுக்கிடையில் புதிய எரியாற்றல் ஒத்துழைப்புக்கு அவர் நம்பிக்கை தெரிவித்தார். மாலத் தீவின் புதிய எரியாற்றல் துறையில் சீனத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதை வரவேற்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.