காசா பிரதேச சூழ்நிலை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-01-13 16:20:18

அல்ஜீரியாவின் கோரிக்கையுடன், காசா பிரதேசத்தின் அப்பாவி மக்களை குடியமர்த்த நிர்பந்திப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, ஐ.நா பாதுகாப்பவை ஜனவரி 12ஆம் நாள் வெளிப்படைக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங்ஜுன் இக்கூட்டத்தில் கூறுகையில், பாலஸ்தீன மக்களை குடியமர்த்த நிர்பந்திப்பதை எதிர்த்து, மனித நேய சீற்றத்தைத் தளர்க்கும் விதம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், காசா பிரதேசத்தில் போர் நிறுத்தத்தை நனவாக்குவதை, அவசர கடமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், எந்த தலையீட்டையும் தடுத்து, வலிமைமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, போரை நிறுத்தி, உயிர்களை மீட்டெடுத்து, அமைதியை மீண்டும் நனவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.