ஏமென் நிலைமை குறித்து ஐ.நா தலைமைச் செயலாளர் கருத்து
2024-01-13 19:00:29

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான் படைகள், ஏமெனின் ஹெளதி ஆயுதவாதிகளின் பல இலக்குகள் மீது வான் தாக்குதலை நடத்தியது பற்றி ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரைஸ் 12ஆம் நாள் அறிக்கையை வெளியிட்டார். ஐ.நா பாதுகாப்பவையின் 2722ஆவது இலக்க தீர்மானத்தை தொடர்புடைய தரப்புகள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

செங்கடலில் சர்வதேச கப்பல்கள் மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. ஏனெனில் உலகளாவிய வினியோக சங்கிலின் பாதுகாப்பை இத்தாக்குதல் சீர்குலைப்பதோடு, உலகப் பொருளாதாரம் மற்றும் மனித நேய நிலைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

அமைதியை நோக்கி செல்லும் பாதையில் ஏமென் காலடி எடுத்து வைப்பதை முன்னேற்ற சர்வதேச சமூகம் பாடுபட வேண்டும் என்று தெரிவித்த அவர், தற்போது வரை ஏமென் சர்ச்சையை முடிவுக்கு வருவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் தோல்வியடையக் கூடாது என்று வலியுறுத்தினார்.