தைவான் பிரதேசத்தின் தேர்தல் முடிவு பற்றி சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம் விமர்சனம்
2024-01-14 17:29:01

தைவான் பிரதேசத்தின் தேர்தல் முடிவு பற்றி சீன அரசவையின் தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் சேன் பின்ஹுவா 13ஆம் நாளிரவு கூறுகையில், ஜனநாயக முன்னேற்றக் கட்சி, தைவான் தீவில் பெரும்பாலோர் கருத்தைப் பிரதிநிதிப்படுத்தவில்லை என்பதை தைவான் பிரதேசத்தின் இரண்டு தேர்தல்களின் முடிவு காட்டுகிறது என்றும், இரு கரை உறவின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திசையை தேர்தல் மாற்ற முடியாது மற்றும் தாய்நாட்டின் ஒன்றிணைப்புப் போக்கினைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தைவான் சுதந்திரச் சக்திகளின் பிளவு செயல்களையும், வெளிப்புற சக்திகளின் தலையீட்டையும் உறுதியாக எதிர்க்கிறோம். தைவானின் தொடர்புடைய கட்சிகள், சமூக குழுக்கள் மற்றும் பல்வேறு சமூக துறையினருடன் இணைந்து, இரு கரைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைத் தூண்டி, இரு கரைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஆழமாக்கி, சீனப் பண்பாடுகளைக் கூட்டாக பரவல் செய்து, இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சியையும் தாய்நாட்டின் ஒன்றிணைப்பு இலட்சியத்தையும் முன்னேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.