சீனப் பிரதிநிதிக் குழு அமெரிக்காவில் பயணம்
2024-01-14 16:47:54

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சர் லியூ ஜியான்சாவின் தலைமையில், சீனப் பிரதிநிதிக் குழு ஜனவரி 8 முதல் 13ஆம் நாள் வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டது. இப்பயணத்தின் போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் முதன்மை துணை உதவியாளர், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சியின் செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள், சான் பிரான்சிஸ்கோ மாநகராட்சித் தலைவர், அமெரிக்காவின் நாணயம், வணிகம், சிந்தனை கிடங்கு, ஊடகம் ஆகிய துறையினர்கள் முதலியோருடன், சீனப் பிரிதிநிதிக் குழுவினர்கள் சந்திப்பு நடத்தினர். சீன வளர்ச்சியின் எதிர்காலம், சீன-அமெரிக்க உறவு, உலக மேலாண்மை ஆகியவை குறித்து பிரதிநிதிக் குழு பல்வேறு தரப்புகளுடன் ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டது.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் உருவாக்கிய முக்கிய ஒத்த கருத்துகளைத் தொடர்ந்து செயல்படுத்தி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.