அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து
2024-01-14 19:05:52

சீனாவின் தைவான் பிரதேசத்தின் தேர்தல் பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை, ஒரே சீனா என்ற கோட்பாட்டையும், மூன்று சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளையும் கடுமையாக மீறியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடாகவும், சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாகவும், சீன-அமெரிக்க உறவின் அரசியல் அடிப்படையாகவும் இருக்கிறது. அமெரிக்காவும் தைவானும் எந்த வடிவத்திலும் அதிகாரப்பூர்வ பரிமாற்றம் மேற்கொள்வதை சீனா எப்போதும் உறுதியாக எதிர்க்கிறது. அமெரிக்கத் தரப்பு எந்த வழிமுறையிலும் தைவான் விவகாரத்தில் தலையிடுவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று அவர் தெரிவித்தார். ஒரே சீனா என்ற கோட்பாட்டையும், மூன்று சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளையும் அமெரிக்கா பின்பற்றி, தைவானுடனான அதிகாரப்பூர்வ பரிமாற்றத்தை நிறுத்த வேண்டும். தைவான் சுதந்திர சக்திகளுக்கு எந்த ஒரு தவறான அறிக்குறியை விடுப்பதை நிறுத்த வேண்டும் என வற்புறுத்துகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.