சீனாவின் கிராமப்புறத்தில் அஞ்சல் சேவை வளர்ச்சி
2024-01-14 17:00:54

China post நிறுவனம் ஜனவரி 14ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இந்நிறுவனம், விரைவஞ்சல் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு, சீனாவின் 75 விழுக்காடான நிர்வாக கிராமங்களில் சேவை வழங்கியுள்ளது.

2023ஆம் ஆண்டின் இறுதிவரை, மாநிலத் தலைநகர்களுக்கிடையிலான அஞ்சல் சேவை 2.23 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. அதற்கான செயல்திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இரகசியமான கடிதங்கள் கடந்த 16 ஆண்டுகளாக பாதுகாப்பாக வழங்கப்படுகின்றன.

மேலும், 2023ஆம் ஆண்டின் இறுதிவரை, சீனாவின் 1061 மாவட்டங்களைச் சேர்ந்த 6010 கிராமங்கள் மற்றும் வட்டங்களில், அஞ்சல் சேவை மையங்களும், 4 லட்சம் அஞ்சல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள விரைவஞ்சல் பொருட்களின் எண்ணிக்கை 270 கோடியை எட்டியது.