சீனாவில் கப்பல் கட்டும் தொழிலின் வளர்ச்சி
2024-01-15 19:04:50

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஜனவரி 15ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, சீனாவின் கப்பல் கட்டும் தொழிலின் மூன்று குறியீடுகள் கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகில் முதலிடம் வகித்து வருகின்றது. உலகளவில் இம்மூன்று குறியீடுகள் பன்முகங்களிலும் அதிகரித்து வரும் ஒரேயொரு நாடாக சீனா மாறியுள்ளது.

தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு, சீனாவில் 4 கோடியே 23 லட்சத்து 20 ஆயிரம் டன் எடையிலான கப்பல்கள் கட்டப்பட்டன. இது, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 11.8 விழுக்காடு அதிகரித்தது. புதிய முன்பதிவுகளின் அளவு, 7 கோடியே 12 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 56.4 விழுக்காடு அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு இறுதி வரை, கட்ட முடிக்கப்படவுள்ள கப்பல்களின் முன்பதிவுகளின் அளவு, 13 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் டன்னை எட்டியது. இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 32 விழுக்காடு அதிகரித்தது. இம்மூன்று குறியீடுகள் 10 விழுக்காட்டு மேல் அதிகரித்து வருவது இது முதன்முறையாகும்.

உலகளவில் சீனக் கப்பல் கட்டும் தொழிலின் வளர்ச்சி போக்கினையும் சீனாவின் கப்பல் கட்டும் ஒட்டுமொத்த ஆற்றலையும் இத்தரவுகள் காட்டுவதாக சீனக் கப்பல் தொழில் சங்கத்தின் தலைமை செயலாளர் லீ யன்சிங் தெரிவித்தார்.