தைவான் நிலைமை பற்றி சீனாவின் கடுமையான நிலைப்பாடு
2024-01-15 10:06:06

எகிப்தில் பயணம் மேற்கொண்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஜனவரி 14ஆம் நாள்  கெய்ரோவில் எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே ஹசன் ஷூக்ரியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தைவான் தலைவர் தேர்தல் முடிவுக்குப் பிறகு தைவான் நீரிணை இருகரை உறவு மற்றும் தைவான் நிலைமை குறித்து வாங் யீ கூறுகையில், தைவான் தேர்தல், சீனாவின் உள்விவகாரமாகும். தேர்தலின் முடிவு எது என்பதைப் பொருட்படுத்தாமல், உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது என்பதையும்  தைவான் சீனாவின் ஒரு பகுதி என்ற அடிப்படை உண்மையையும் மாற்ற முடியாது. அது போன்றே, சர்வதேச சமூகம் பின்பற்றி வருகின்ற ஒரே சீனா என்ற கோட்பாட்டுப் பொதுக் கருத்தையும் மாற்ற முடியாது என்றார்.

தைவான் ஒருபோதும் தனி நாடாக இருந்ததில்லை. கடந்த காலத்தில் அதற்குத் தனி நாடு என்னும் அங்கீகாரம் இல்லை, எதிர்காலத்திலும் இருக்காது. தைவான் சுதந்திர சக்திகள் தைவான் சகநாட்டவர்களின் நலன்களைத் தீவிரமாக அச்சுறுத்தி, சீன தேசத்தின் அடிப்படை நலன்களைக் கடுமையாகச் சேதப்படுத்துகின்றன. எவ்வாறாயினும், முழுமையான தாய்நாட்டின் ஒன்றிணைப்பைச் சீனா இறுதியில் எட்டும். மேலும் தைவான் தாய்நாட்டின் அரவணைப்பிற்குத் திரும்புவது உறுதி என்றும் வாங் யீ தெரிவித்தார்.