பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து சீன-அரபு நாடுகள் லீக் செயலகம் கூட்டறிக்கை
2024-01-15 10:08:11

ஜனவரி 14ஆம் நாள், சீன அரசவையின் உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அரபு நாடுகள் லீக்கில் பயணம் மேற்கொண்ட போது, அதன் தலைமைச்செயலாளர் அகமது அபுல் கெய்துடன் சந்திப்பு நடத்தினார். பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து இரு தரப்பினரும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

சர்வதேச சமூகம் வெகுவிரைவில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உடன்படியாக போர் நிறுத்தத்தை நனவாக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் சொந்த நாட்டி நிர்வாகிக்க வேண்டும். இரு நாடுகள் என்ற தீர்வு திட்டத்தை நனவாக்க வேண்டும். அண்மையில், செங்கடல் நிலைமை தொடர்ந்து தீவிரமாகி வருவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரதேச நிலைமையைத் தணிவித்து, காசா பிரதேசத்தில் மனித நேய நெருக்கடியை நிகழாமல் தவிர்ப்பத்தில் அரபு நாடுகள் லீக் முக்கிய பங்காற்றியுள்ளதை சீனா பாராட்டி வருகிறது. காசா மோதலை கட்டுப்படுத்தி, போர் நிறுத்தத்தை நனவாக்கி, பாலஸ்தீன மக்களின் நீதியான இலட்சதத்திற்கு ஆதரவளிக்கும் சீனாவை அரபு நாடுகள் வெகுவாக மதிப்பிட்டுள்ளன.