வேலைவாய்ப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு பாதிப்பு: சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்
2024-01-15 15:52:04

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளில் 60 சதவீத வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் என்று ஜனவரி 14ஆம் நாள், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், முறையே 40 சதவீதம் மற்றும் 26 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். பொதுவாக, உலகில் கிட்டத்தட்ட 40 சதவீத வேலைவாய்ப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவால் பாதிப்பு ஏற்படுத்தும் என்றார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வழங்கும் வாய்ப்புகளை விரைவாகப் பயன்படுத்தும் வகையில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு நாம் முக்கியமாக உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.