சீன தலைமையமைச்சரின் ஸ்விட்சர்லாந்து பயணம்
2024-01-15 11:20:38

உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான கிளாஸ் ஸ்வாப், சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் வயோலா ஆம்ஹெர்ட், அயர்லாந்து தலைமையமைச்சர் லியோ வரத்கர் ஆகியோர் அழைப்பின் பேரில், சீன தலைமையமைச்சர் லி ச்சியாங், உலக பொருளாதார மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜனவரி 14ஆம் நாள் காலை சிறப்பு விமானம் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார். அவர், சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்தில் அரசு முறை பயணத்தை மேற்கொள்கிறார்.

14ஆம் நாள் மாலை சூரிச் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த அவர், சுவிட்சர்லாந்து பயணத்தைத் துவங்கினார்.

சீனாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்டு 74 ஆண்டுகள் ஆகின்றன. இரு நாட்டு உறவுகள் எப்போதும் சீராக வளர்ந்து வருகிறது. இரு நாட்டுத் தலைவர்களின் முக்கியமான உத்தி நோக்கு வழிகாட்டுதலைப் பின்பற்றி, இருதரப்புக்கும் இடையிலான அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தி, ஒன்றுக்கொன்று நன்மை தரும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, மக்களிடையே நட்பை முன்னெடுக்க, சீனா சுவிட்சர்லாந்துடன் இணைந்து பணியாற்றும் என்று லி ச்சியாங் தெரிவித்தார்.