சூடானில் ஆயுத மோதலில் அகதிகளின் எண்ணிக்கை பெரும் அதிகரிப்பு
2024-01-15 19:25:21

சூடானில் கடந்த 9 மாதங்களாக நிகழ்ந்த ஆயுத மோதலின் காரணமாக வீடுவாசலின்றி அல்லல்படும் மக்களின் எண்ணிக்கை 74 லட்சத்தை எட்டியுள்ளது என்று ஐ.நாவின் மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் ஜனவரி 14ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

புதிய தரவுகளின்படி, கடந்த திங்களுடன் சூடானில் அகதிகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மனித நேய உதவிக்கான தேவையை இது அதிகரித்துள்ளது. ஆனால், இணையம் மற்றும் தொலைத் தொடர்பு தேக்க நிலையில் இருப்பது, நிதி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை முதலியவை, நிவாரணப் பணியை தாமதப்படுத்தியுள்ளன என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.