சீனாவில் வசந்த விழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடு
2024-01-16 19:09:19

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜனவரி 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீன ரயில்வே நிறுவனத்தின் பயணியர் போக்குவரத்து பிரிவின் இயக்குநர் ஹுவாங்சின் கூறுகையில், இவ்வாண்டு வசந்த விழாவுக்கான போக்குவரத்து காலத்தில், இருப்புப்பாதையின் மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 48 கோடியையும், தினசரி எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்தையும் எட்டக்கூடும். கடந்த ஆண்டில் இருந்ததை விட 37.9 விழுக்காடை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்குத் திரும்புதல், சுற்றுலா பயணம் உள்ளிட்ட நோக்கத்துடனான பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது என்றார்.

மேலும், சீன இருப்புப்பாதை போக்குவரத்தின் புதிய திட்டம் ஜனவரி 10ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. இந்த அடிப்படையில், வசந்த விழாவுக்கான தொடர்வண்டிகளை இந்நிறுவனம் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. தவிரவும், மின்சார உற்பத்தி மற்றும் வெப்பமேற்றும் வசதிக்கான நிலக்கரிகள் விநியோகத்தை இந்நிறுவனம் உத்தரவாதம் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.