நைஜீரியாவில் கப்பல் கவிழ்ந்த விபத்து
2024-01-16 19:45:58

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் பயணியர் கப்பல் ஒன்று 15ஆம் நாள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி விட்டது என்று அம்மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இக்கப்பலில் பயணித்தவர்களில் குறைந்தது 100 பேரை காணவில்லை. தற்போது மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  காணாமல் போனவர்களில் உயிரோடு இருப்பவர் பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதிக எடை, மோசமான காலநிலை உள்ளிட்ட காரணங்களினால், கப்பல் விபத்து நைஜீரியாவில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.