துனீசிய அரசுத் தலைவர்-சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
2024-01-16 10:51:10

ஜனவரி 15ஆம் நாள் துனீசிய அரசுத் தலைவர் கைஸ் சயீத், தலைநகரான துனீசியாவில் பயணம் மேற்கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயைச் சந்தித்துப் பேசினார்.

துனீசிய அரசுத் தலைவர் கைஸ் சயீத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்த அன்பான வாழ்த்துக்களை வாங் யீ தெரிவித்தார். சீனாவுக்கும் துனீசியாவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், இரு நாட்டு உறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகின்றது. சிறிது காலத்துக்கு முன், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பி, இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கான திசையைச் சுட்டிக்காட்டினர் என்று வாங் யீ தெரிவித்தார். ஷிச்சின்பிங் முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு ஆகியவற்றைக் கூட்டாக நடைமுறைப்படுத்தி, உலக பல துருவமுனைப்பு மற்றும் பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புவதாக வாங் யீ தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு வாங் யீயிடம் சயீத் கேட்டுக்கொண்டார். சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷி ச்சின்பீங்கின் கருத்துக்களைச் சயீத் ஏற்றுக்கொண்டார். நவீனமயமாக்க கட்டுமானத்தை முன்னேற்றுவதில் சீனா பெற்றுள்ள மாபெரும் சாதனைகளை அவர் வெகுவாகப் பாராட்டினார். கடந்த 60 ஆண்டுகளில் இரு நாட்டு உறவின் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பில் பெற்றுள்ள மாபெரும் சாதனைகள் குறித்து அவர் உயர்வாக மதிப்பிட்டார்.