ஈராக்கிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் அருகில் குண்டு வெடிப்பு
2024-01-16 10:34:15

அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனம் ஈராக் பாதுகாப்பு துறையினர் ஒருவரின் செய்தியை மேற்கோள் காட்டி, ஈராக்கின் வட பகுதியில் அமைந்துள்ள குர்தி தன்னாட்சி மாநிலத்தின் தலைநகர் எர்பிலில் அமெரிக்க துணை தூதரகத்தின் அருகில் பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலுக்கு ஈரான் இஸ்லாமியப் புரட்சி இராணுவப் படை பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. இப்பகுதியில் ஈரானின் மீதான எதிர்ப்பு பயங்கரவாதி மற்றும் உளவு நிறுவனங்களுக்கு இப்படை ஏவுகணைகளை குறிவைத்துள்ளது. அமெரிக்கப் படையினர்கள் யாரும் இத்தாக்குதலில் காயமடையவில்லை.