தாராள வர்த்தக ஒப்பந்தம் பற்றிய சீனா மற்றும் ஸ்விட்சர்லாந்தின் தீர்மானம்
2024-01-16 10:19:25

ஜனவரி 15ஆம் நாள் காலையில், சீன தலைமையமைச்சர் லி ச்சியாங் மற்றும் சுவிஸ் கூட்டாட்சியின் தலைவர் வயோலா ஆம்ஹெர்ட் பெர்னில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுவிஸ் கூட்டமைப்பின் உருப்பினரும், பொருளாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சருமான ஜுய் பம்லான் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். இருநாட்டு தாராள வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை நிறைவேற்றியதாக சீனா மற்றும் ஸ்விட்சர்லாந்து அறிவித்தன. அதிகாரப்பூர்வ மேம்படுத்தல் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க இருதரப்பு ஒப்புக்கொண்டது.

ஸ்விட்சர்லாந்துடன் உயர்மட்ட பரிமாற்றங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், அனைத்து நிலைகளிலும் துறைகளிலும் பரிமாற்றங்களை மீண்டும் தொடங்குவதை விரைவுபடுத்தவும், இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சீனா விரும்புகிறது என்று லி ச்சியாங் தெரிவித்தார்.

சீனாவுடன் உயர்தர இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மேம்படுத்தவும், பல்வேறு துறைகளில் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்புகளையும் ஆழப்படுத்தவும், டிராகன் ஆண்டில் இருநாட்டு புத்தாக்க நெடுநோக்கு கூட்டாளியுறவை ஊக்குவிக்கவும் ஸ்விட்சர்லாந்து விரும்புகிறது என்று ஆம்ஹெர்ட் மற்றும் பம்லான் தெரிவித்தனர்.