டிசம்பரில் இந்திய வணிக ஏற்றுமதி அதிகரிப்பு
2024-01-16 17:18:11

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்திலான வணிக ஏற்றுமதி, அதற்கு முந்தைய டிசம்பரை விட 1 விழுக்காடு அதிகரித்து, 3,845 கோடி டாலரை எட்டியதாக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த அதிகரிப்புக்கு பொறியியல் துறை பொருள்கள், இரும்புத் தாது, மணிக் கற்கள் மற்றும் ஆபரணங்கள், மின்சாதனப் பொருகள்கள் மற்றும் மருந்துகள் ஆகியவை காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த வணிகப் பற்றாக்குறை அளவு 35.87 விழுக்காடு உயர்ந்து 6,934 கோடி டாலரை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.